ஆசிய கோப்பை, சூப்பர் 4: இந்தியா vs இலங்கை - உத்தேச லெவன்!
ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா, தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்த நிலையில் இன்று இலங்கை அணியை எதிர்கொள்ள உள்ளது. இதில் இந்தியா வெற்றிபெறவில்லை என்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாது.
இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல் இன்னமும் சரியான துவக்கத்தை தரவில்லை. கோலி மட்டுமே தொடர்ச்சியாக நம்பிக்கையளிக்க கூடிய வகையில் விளையாடி வருகிறார். மற்றபடி ஹார்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் போன்றவர்கள் ஆட்டம் வாய்த்தால் மட்டுமே அதிரடி காட்டுவதால், இவர்களையும் முழுமையாக நம்ப முடியவில்லை.
இலங்கை அணியில் சொதப்பல் வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்பதால், இன்று டெத் ஓவர்களில் இந்த மூன்று பேரும் காட்டடி அடித்து ரன்களை குவிக்க வாய்ப்புள்ளது. ஆவேஷ் கான் காயம் காரணமாக விலகிய நிலையில் ஹார்திக் பாண்டியா கடந்த போட்டியில் 4 ஓவர்களையும் வீசி 44 ரன்களை விட்டுக்கொடுத்து சொதப்பினார்.
இன்றும் இதே தவறு நீடித்தால் இந்திய அணிக்கு பலத்த அடி கிடைக்க வாய்ப்புள்ளது. புவி போன்ற மற்ற பௌலர்களும் கடந்த போட்டியில் சொதப்பியதால், இம்முறை தங்களது திறமையை நிரூபிக்க அதிரடியாக பந்துவீசி, இலங்கை பேட்டர்களை திணறடிக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளது.
இலங்கை அணியை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. பந்துவீச்சில் பலம் வாய்ந்த அணியாக இருக்கும் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக 175 ரன்களை சிறப்பாக துரத்தி வெற்றிபெற்றனர். இதில் யாரும் அரை சதம் அடிக்கவில்லை. பலர் 30+ ரன்களை அடித்து, தங்களது பேட்டிங் வரிசையின் வலிமையை வெளிகாட்டினர். இதனால், இலங்கை அணியில் 7,8 விக்கெட்கள் விழுந்தாலும் ரன் வேகத்தில் தொய்வு ஏற்பட வாய்ப்புகள் இருக்காது என்றுதான் கருதப்படுகிறது.
துபாயில் பிட்சில் அதிகம் சேஸ் செய்த அணிகள்தான் வென்றுள்ளது. இன்றும் டாஸ்தான் மிகமுக்கியமானதாக இருக்கிறது. இந்தியா, இலங்கை எந்த அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தாலும், அவர்களுக்குத்தான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இதனால், ரோஹித் டாஸ் வென்று கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
உத்தேச லெவன்
இலங்கை – தனுஷ்க குணதிலக்க, பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், சரித் அசலங்கா, பானுக ராஜபக்ச, தசுன் ஷனக (கே), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷனா, அசித்த ஃபெர்னாண்டோ, தில்சன் மதுஷங்க
இந்தியா - ரோஹித் சர்மா (கே), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் , தீபக் ஹூடா, அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய்