சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த வீரர்களுக்கான ஆசிய லெண்ட்ஸ் லீக் டி20 தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் இலங்கை லையன்ஸ் மற்றும் இந்தியன் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

Advertisement

உதய்ப்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியன் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு நமன் ஓஜா - ராகுல் யாதவ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ராகுல் யாதவ் 2 ரன்னில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரர் நமன் ஓஜாவும் 10 ரன்களுடனும் நடையைக் கட்டினர். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஃபைஸ் ஃபசல் - யோகேஷ் நகர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

Advertisement

இதில் யோகேஷ் 28 ரன்களில் விக்கெட்டை இழக்க, அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஃபைஸ் ஃபசல் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 41 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் மன்ப்ரீத் கோனி 25 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் இந்தியன் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்களைச் சேர்த்தது. இலங்கை தரப்பில் விகும் சஞ்சயா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியில் லியோ ஃபெர்னாண்டோ ஒரு ரன்னுடன் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதேசமயாம் மற்றொரு தொடக்க வீரரான திலகரத்னே தில்சன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். ஆனால் மறுமுனையில் விளையடைய வீரர்களால் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

இருப்பினும் சிறப்பான் ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக்ரத்னே தில்சன் அரைசதம் கடந்ததுடன் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 69 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியன் ராயல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை லையன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News