இனி கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பை இழந்தேன் என அஞ்சினேன் - ஜோஃப்ரா ஆர்ச்சர்!

Updated: Thu, May 05 2022 20:39 IST
Image Source: Google

இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்சர் காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருக்கிறார். இதனால் தான் கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பையே இழந்துவிடுவேன் என அஞ்சியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஆர்ச்சர், “முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக எனக்கு முதல் அறுவை சிகிச்சை கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்றது. அதன்பின் கிரிக்கெட் விளையாடலாம் என நம்பிக்கையாக நான் போட்டியில் பங்கேற்றேன். ஆனால் அந்த சிகிச்சை பலனளிக்கவில்லை என நான் பந்துவீசும் போது தான் தெரிந்தது. உடனே போட்டியில் இருந்து வெளியேறினேன். அதன்பிறகு இரண்டாவது அறுவை சிகிச்சை கடந்த டிசம்பரில் நடந்தது.

5 மாதங்களாக ஓய்வில் இருக்கிறேன். இப்போது தான் குணமடைந்து வருகிறேன். ஒரு கட்டத்தில் நான் கிரிக்கெட் விளையாட முடியுமா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. எனது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு இனி கிரிக்கெட் விளையாடவே முடியாது என அஞ்சினேன். ஆனால் இப்போது எனக்கு எதிர்காலத்தை பற்றி நம்பிக்கை வருகிறது. 

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் எனக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது. எனது ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.பென் ஸ்டோக்ஸ் தலைமையில் விரைவில் கிரிக்கெட்டில் பங்கேற்பேன்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை