AUS vs ENG, 2nd T20I: மாலன், மொயீன் அதிரடி; ஆஸிக்கு 179 ரன்கள் இலக்கு!

Updated: Wed, Oct 12 2022 15:24 IST
Image Source: Google

இங்கிலாந்து அணி டி20 உலக கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில்  2ஆவது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

கான்பெர்ராவில் நடந்து வரும் 2ஆவது டி20 போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இங்கிலாந்து அணியும், இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும் களமிறங்கியுள்ளன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இந்தியாவிற்கு எதிரான டி20 தொடர் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 ஆகிய போட்டிகளில் கேமரூன் க்ரீன் தொடக்க வீரராக இறங்கிய நிலையில், டி20 உலக கோப்பை நெருங்குவதால், அதில் தொடக்க ஜோடியாக இறங்கும் வார்னர் - ஃபின்ச் ஆகிய இருவரும் இந்த போட்டியில் தொடக்க வீரர்களாக விளையாடுகின்றனர். 

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் இணை சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து நடையைக் கட்டினர். ஆவர்களைத் தொடர்து வந்த ஹாரி ப்ரூம், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரும் விரைவிலேயே ஆட்டமிழந்தனர்.

இதனால் 54 ரன்களைச் சேர்பதற்குள்ளாகவே இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த டேவிட் மாலன் - மொயீன் அலி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

இதில் அதிரடியாக விளையாடிய டேவிட் மாலன் அரைசதம் கடக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மொயீன் அலி 27 பந்துகளில் 2 சிக்சர், 4 பவுண்டரிகள் என 44 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த சாம் கரனும் 8 ரன்களோடு பெவிலியன் திரும்பினார்.

அதன்பின் இறுதிவரை அதிரடியாக விளையாடிய டேவிட் மாலன் 48 பந்துகளில் 4 சிக்சர், 7 பவுண்டரிகள் என 82 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலியா தரப்பில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை