AUS vs PAK, 3rd Test: 313 ரன்களில் பாகிஸ்தான் ஆல் அவுட்; பாட் கம்மின்ஸ் அபார பந்துவீச்சு!

Updated: Wed, Jan 03 2024 13:47 IST
Image Source: Google

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளைடாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. மேலும் இது டேவிட் வார்னரி கடைசி டெஸ்ட் போட்டி என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்தது. இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபிக் - சைம் அயுப் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் இருவரும் ரன்கள் ஏதுமின்றி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் 26 ரன்களுக்கும், சௌத் சகீல் 5 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். பின்ன ஜோடி சேர்ந்த கேப்டன் ஷான் மசூத் - முகமது ரிஸ்வான் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷான் மசூத் 35 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது ரிஸ்வான் அரைசதம் கடந்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய முகமது ரிஸ்வான் சதமடிப்பார் என எதிர்ப்பர்க்கப்பட்ட நிலையில் 10 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 88 ரன்களில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

அதன்பின் இணைந்த ஆகா சல்மான் - அமர் ஜமால் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தனர். பின் 53 ரன்கள் எடுத்த நிலையில் அகா சல்மான் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய அமர் ஜமால் 9 பவுண்டரி, 4 சிக்சர்களை விளாசி 82 ரன்களைச் சேர்த்தார். 

இதன்மூலம் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 313 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேப்டன் பாட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்களை எடுத்துள்ளது. இதில் டேவிட் வார்னர் 6 ரன்களுடனும், உஸ்மான் கவாஜா ரன்கள் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை