ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி சிட்னியில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த பென் மெக்டர்மோட் - ஜோஷ் இங்லிஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் 23 ரன்களைச் சேர்த்த ஜோஷ் இங்லிஸ் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த மெக்டர்மோட் அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 53 ரன்களில் மெக்டர்மோட் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஸ்மித், மேக்ஸ்வெல், என ஹசரங்கா பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதையடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடியாக விளையாடி 20 ரன்களைச் சேர்த்தார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் இலங்கையின் பந்துவீச்சை எதிர்கொள்ளமுடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை மட்டுமே சேர்த்தது. இலங்கை அணி தரபில் வநிந்து ஹசரங்கா 3 விக்கெட்டுகளையும், துஷ்மந்தா சமீரா, பினுரா ஃபெர்னாண்டோ, சமிகா கருணரத்னே தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.