ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ர இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
Advertisement
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் பென் மெக்டர்மோட் 18 ரன்னிலும், ஆரோன் ஃபிஞ்ச் 25 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
Advertisement
அடுத்து களமிறங்கிய ஜோஷ் இங்கிலிஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இங்கிலிஸ் 48 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல்லும் 15 ரன்களில் ஆட்டமிழக்க, ஸ்டீவ் ஸ்மித் 14 ரன்களில் வெளியேறினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களைச் சேர்த்துள்ளது.
இலங்கை அணி தர்பபில் வநிந்து ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.