ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டவுன்ஸ்வில்லேவில் நடைபெற்றுவருகிறது.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் இன்னசெண்ட் கையா 17 ரன்களோடு வெளியேறி ஏமாற்றமளித்தார். 

Advertisement

பின்னர் ஜோடி சேர்ந்த மருமணி - வெஸ்லி மதவெரே இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மருமணி 45 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஆடம் ஸாம்பா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஆனாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வெஸ்லி மதவெரே அரைசதம் கடந்து அசத்தினார். ஆனால் டோனி முன்யங்கா 7 ரன்களிலும், சிக்கந்தர் ரஸா, என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வெஸ்லி மதவெரே 72 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பி ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களோடு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.

இதனால் 47.3 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 200 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கமரூன் க்ரீன் 5 விக்கெட்டுகளையும், ஆடம் ஸாம்பா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

Advertisement

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் ஃபிஞ்ச் 15 ரன்களோடு பெவிலியன் திரும்பினார். இதையடுத்து டேவிட் வார்னர் - ஸ்டீவ் ஸ்மித் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் அரைசதம் கடந்து, 57 ரன்களோடு பெவிலியன் திரும்பினார். மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித்தும் 48 ரன்களுடன் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

அதன்பின் களமிறங்கிய அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், 33.3 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி இலக்கை எட்டியதுடன், 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News