AUSW vs INDW: மழையால் முதல் டி20 ரத்து
ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி குயின்ஸ்லேண்டில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா - ஷஃபாலி வர்மா இணை அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர். இதில் ஷஃபாலி வர்மா 3 சிக்சர்களை பறக்கவிட்டு 18 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடந்து ஸ்மிருதி மந்தனாவும் 17 ரன்களில் ஆட்டமிழக்க, பின்ன வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.
ஆனால் ஹர்மன்ப்ரீத் கவுர், யஸ்திகா பாட்டியா ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரைசதம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
ஆனால் 15.2 ஓவர்களின் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் இப்போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இப்போட்டியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 49 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.