ஆஷஸ் தொடர்: ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன் அறிவிப்பு!

Updated: Tue, Jan 04 2022 11:54 IST
Australia Announce Playing XI For Sydney Test, Make One Forced Change (Image Source: Google)

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

மொத்தம் 5 போட்டிக்களைக் கொண்ட இத்தொடரில் இதுவரை 3 போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதன்படி இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்டை வென்று 3-0 என்கிற முன்னிலையுடன் ஆஷஸ் தொடரைக் கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலிய அணி. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 4ஆவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை நடைபெறுகிறது. இந்த டெஸ்டில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாட் கம்மின்ஸ் தலைமையிலான இந்த அணியில் ட்ராவிஸ் ஹெட்டிற்கு பதிலாக நட்சத்திர வீரர் உஸ்மான் கவாஜா சேர்க்கப்பட்டுள்ளார். 

ஆஸ்திரேலிய அணி: டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவன் ஸ்மித், உஸ்மான் கவாஜா, கேம்ரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஸ்காட் போலண்ட்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை