உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: முதலிடத்தை இழந்தது இந்திய அணி; மீண்டும் முன்னேறிய ஆஸி!

Updated: Sun, Dec 08 2024 11:56 IST
Image Source: Google

ஒவ்வொரு சர்வதேச டெஸ்ட் போட்டிக்கு பிறகும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புதுபிக்கப்பட்ட புள்ளிப்பட்டியலை ஐசிசி அறிவித்து வருகிறது. அந்தவகையில் தற்சமயம் இந்தியா - ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று முடிவடைந்தது. இதில் ஆஸ்திரேலிய அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

அதேசமயம் இங்கிலாந்து அணி 323 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன, 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் சர்வதேசா கிரிக்கெட் கவுன்சில் புதுபிக்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் கடந்த வாரம் முதலிடத்தில் இருந்த இந்திய அணியானது தற்போது பின்னடைவை சந்தித்துள்ளது. 

அந்தவகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 60.71 புள்ளிகளைப் பெற்று முதலிடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில், தோல்வியைத் தழுவிய இந்திய அணியானது 57.29 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணியானது 59.29 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், இலங்கை அணி 50 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும் தொடர்கின்றனர். 

இதுதவிர்த்து நியூசிலாந்து அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டிலில் 45.24 புள்ளிகளுடன் 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில், இப்போட்டியில் அடைந்த தோல்வியின் காரணமாக நியூசிலாந்து அணியானது 44.23 புள்ளிகளுடன் 6ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள்து. முன்னதாக நியூசிலாந்து அணி 5ஆம் இடத்திலும், இங்கிலாந்து அணி 6ஆம் இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 மேலும் பாகிஸ்தான் அணியானது 33.33 புள்ளிகளைப் பெற்று தற்போது 7ஆம் இடத்தில் உள்ள நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் வங்கதேச அணியானது 31.25 புள்ளிகளைப் பெற்று 8ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் வங்கதேசத்திற்கு எதிராக தோல்வியைத் தழுவிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 24.24 புள்ளிகளுடன் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Also Read: Funding To Save Test Cricket

தற்போது இந்த பட்டியலில் முதல் 5 இடங்களில் உள்ள அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருவதால் இதில் எந்த இரண்டு அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதனால் இனி வரும் டெஸ்ட் போட்டிகள் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருவதால் அப்போட்டியின் முடிவுக்கு பிறகு இந்த பட்டியலில் மேலும் சில மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை