ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது . இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி பென் மெக்டர்மோட்டின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 149 ரன்களைச் சேர்த்தது.

Advertisement

இதில் அதிகபட்சமாக பென் மெக்டர்மோட் 53 ரன்களைச் சேர்த்தார். இலங்கை அணி தரப்பில் வநிந்து ஹசரங்கா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்டு இலக்கை துரத்திய இலங்கை அணி ஆரம்பத்திலேயே குணத்திலகா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, சரித் அசலங்கா, ஹசரங்கா ஆகியோரது விக்கெட்டுகளை இழந்தது. 

மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பதும் நிஷங்காவும் 36 ரன்களில் வெளியேறினார். இதற்கிடையில் மழைக் குறுக்கிட்டதால் ஆட்டம் 19 ஓவர்களாக குறைக்கப்பட்டு இலங்கைக்கு 142 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ஆனாலும் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

Advertisement

இதனால் 19 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய தரப்பில் ஜோஷ் ஹசில்வுட் 4 விக்கெட்டுகளையும், ஆடம் ஸாம்பா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News