AUS vs WI: இன்ட்ரா ஸ்குவாட் போட்டியில் கலக்கும் ஆஸி..!

Updated: Tue, Jul 06 2021 12:54 IST
Image Source: Google

ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 5 டி20 , 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இதற்கான ஆஸ்திரேலிய அணி கடந்த வாரம் வெஸ்ட் இண்டீஸ் சென்றடைந்தது. மேலும் அனுபவ வீரர்கள் டேவிட் வார்னர், கிளென் மேக்ஸ்வெல், பாட் கம்மின்ஸ் உள்ளிட்டோர் தனிப்பட்ட காரணங்களால், இத்தொடரை புறக்கணித்துள்ளனர். 

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி டி20 தொடருக்கு முன்னதாக தங்களுக்குள்ளாகவே இரு அணிகளாக பிரிந்து பயிற்சி ஆட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி ஆரோன் ஃபிஞ்ச் தலைமையில் ஒரு அணியும், மேத்யூ வேட் தலைமையில் மற்றொரு அணியும் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டது. 

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேத்யூ வேட் தலைமையிலான் ஆஸ்திரேலிய லெவன் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களைக் குவித்தது. அதில் அதிகபட்சமாக டேனியல் கிறிஸ்டியன் 47 ரன்களையும், ஹென்ரிக்ஸ் 36 ரன்களையும் சேர்த்தனர். பந்துவீச்சில் ரிலே மெரிடித் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை துரத்திய ஃபிஞ்ச் தலைமையிலான அணி மிட்செல் மார்ஷ், ஆஷ்டன் டர்னர் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தால் 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் மிட்செல் மார்ஷ் 56 ரன்களையும், ஆஷ்டன் டர்னர் 45 ரன்களையும் விளாசினர். 

ஆஸ்திரேலியா 1 : ஆரோன் ஃபிஞ்ச் (கே), ஆஷ்டன் அகர், மிட்செல் மார்ஷ், ஆஷ்டன் டர்னர், ஜோஷ் பிலிப், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, நாதன் எல்லிஸ், வெஸ் அகர், ரிலே மெரிடித்.

ஆஸ்திரேலியா 2: மத்தேயு வேட் (கே), அலெக்ஸ் கேரி, பென் மெக்டெர்மொட், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், டான் கிறிஸ்டியன், மிட்செல் ஸ்வெப்சன், ஆண்ட்ரூ டை, ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப், ஜோஷ் ஹேசில்வுட், தன்வீர் சங்கா.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை