இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனைடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பிரிஸ்பேனில் நடைபெற்றது.

Advertisement

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்வது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு போஃப் லிட்ச்ஃபீல்ட் - ஜார்ஜியா வோல் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்து அசத்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு 130 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபோப் லிட்ச்ஃபில்ட் 60 ரன்னில் விக்கெட்டி இழந்தார்.

Advertisement

அதன்பின் ஜார்ஜியா வொல்வுடன் இணைந்த எல்லிஸ் பெர்ரியும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த ஜார்ஜியா வோல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 12 பவுண்டரிகளுடன் 101 ரன்களை எடுத்த நிலையில் ஜார்ஜியா வோல் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய பெத் மூனியும் சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதற்கு மத்தியில் எல்லிஸ் பெர்ரியும் தனது ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து அசத்தியதன் மூலம் அஸ்திரேலிய அணியும் 300 ரன்களை கடந்தது. 

பின் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய எல்லிஸ் பெர்ரி 7 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 105 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அனபெல் சதர்லேண்ட், ஆஷ்லே கார்ட்னர் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, அரைசதம் கடந்திருந்த பெத் மூனி 56 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இறுதியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த நிலையிலும் 371 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் சைமா தாக்கூர் 3 விக்கெட்டுகளையும், மின்னு மணி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதனையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ரிச்சா கோஷ் மற்றும் ஸ்மிருதி மந்தனா தொடக்கம் கொடுத்தனர். இதில் ரிச்சா கோஷ் அதிரடியாக விளையாடிய நிலையில், மறுபக்கம் ஸ்மிருதி மந்தனா 9 ரன்னிலும், ஹர்லீன் தியோல் 12 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரிச்சா கோஷ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில் 54 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஹர்மன்பிரீத் கௌர் - ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹர்மன்பீரித் கவுர் 38 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஜெமிமா ரோட்ரிக்ஸும் 43 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளில் மின்னு மணி 46 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனை சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் இந்திய அணி 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 249 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி, 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் வென்றது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News