டி20 உலகக்கோப்பை : இந்திய அணியில் ஷர்துல் தாக்கூர்!

Updated: Wed, Oct 13 2021 18:15 IST
Axar Patel Out Of Indian Squad For T20 World Cup, This Player Gets A Chance (Image Source: Google)

இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபாய், அபுதாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. 

\தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிந்தபிறகு அதிலிருந்து தேர்வாகும் 4 அணிகள், ஏற்கெனவே தேர்வான 8 அணிகளுடன் இணைந்து பிரதான சுற்றான சூப்பர் 12இல் அக்டோபர் 23 முதல் போட்டியிடவுள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை அக்டோபர் 24 அன்று பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது. 

இத்தொடருக்கான இந்திய அணியும் கடந்த மாதமே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்திய அணியில் இடம்பிடித்திருந்த அக்ஸர் பட்டேலுக்கு மாற்று வீரராக ஷர்துல் தாக்கூர் டி20 உலகக்கோப்பை தொடரில் இடம்பிடித்துள்ளார்.

ஐபிஎல் 2021 போட்டியில் மும்பை அணியில் விளையாடும் ஹார்திக் பாண்டியா ஒரு ஓவர் கூட வீசாததால் அவருடைய உடற்தகுதி குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. பாண்டியாவில் பந்துவீச முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அணியின் மற்றொரு ஆல்ரவுண்டராக ஷர்துல் தாக்குர் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் அணியில் ஏராளமான சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளதால் அக்‌ஷர் படேல் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

மேலும் வலைப்பயிற்சிக்காக வெங்கடேஷ் ஐயர், உம்ரான் மாலிக், ஆவேஷ் கான், ஹர்ஷல் பட்டேல், கரண் சர்மா, ஷபாச் அஹ்மத், கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை