அறிமுக ஆட்டத்தில் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய மாத்ரே - காணொளி!

Updated: Sun, Apr 20 2025 20:38 IST
Image Source: Google

மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான சென்னை  சூப்பர் கிங்ஸ் அணியில் 17 வயதேயான இளம் வீரர் ஆயூஷ் மாத்ரேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மிக இளம் வயதில் அறிமுகமான வீரர் எனும் பெருமையைப் பெற்றுளார்.முன்னதாக சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியதை அடுத்து, ஆயூஷ் மாத்ரே ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கொண்டு இப்போட்டியில் மூன்றாம் வரிசையில் களமிறங்கிய ஆயூஷ் மாத்ரே அதிரடியான அணுகுமுறையை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதிலும் குறிப்பாக அஷ்வானி குமார் வீசிய இன்னிங்ஸின் 4ஆவது ஓவரை வீசிய நிலையில், அந்த ஓவரின் கடைசி மூன்று பந்துகளை எதிர்கொண்ட ஆயூஷ் மாத்ரே ஒரு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்களை விளாசி தனது வருகையைப் பதிவுசெய்தார். 

மேற்க்கொண்டு தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஆயூஷ் மாத்ரே 15 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என 32 ரன்களைக் குவித்த கையோடு விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் ஆயூஷ் மாத்ரே அதிரடியாக விளையாடியா காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதேசமயம் மாத்ரே விக்கெட்டை இழந்த பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டர்கள் மீண்டும் சோபிக்க தவறி வருவது குறிப்பிடத்தக்கது. 

மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன்: ரியான் ரிக்கல்டன், வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா(கேப்டன்), நமன் திர், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரிட் பும்ரா, அஷ்வனி குமார்.

இம்பேக்ட் வீரர்கள்- ரோஹித் சர்மா, கார்பின் போஷ், ராஜ் பாவா, சத்யநாராயண ராஜு, ராபின் மின்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன்: ஷேக் ரஷீத், ரச்சின் ரவீந்திரா, ஆயுஷ் மத்ரே, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, விஜய் சங்கர், ஜேமி ஓவர்டன், எம்எஸ் தோனி(கேப்டன்), நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பத்திரனா.

Also Read: Funding To Save Test Cricket

இம்பேக்ட் வீரர்கள்- அன்ஷுல் கம்போஜ், கமலேஷ் நாகர்கோடி, ராமகிருஷ்ண கோஷ், சாம் குர்ரன், ரவிச்சந்திரன் அஸ்வின்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை