2,6,6,4,4,6: அர்ஷத் கான் ஓவரை பிரித்து மேய்ந்த ஆயூஷ் மாத்ரே - காணொளி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஆயூஷ் மாத்ரே 34 ரன்களையும், டெவான் கான்வே 52 ரன்களையும், உர்வில் படேல் 37 ரன்களையும், சேர்த்தனர். இறுதியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவால்ட் பிரீவிஸ் 19 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தியதுடன் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 57 ரன்களைச் சேர்த்து கடைசி பந்தில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் ரவீந்திர ஜடேஜா 21 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்களைச் சேர்த்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் பிரஷித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் சிஎஸ்கேவின் ஆயூஷ் மாத்ரே இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரிலேயே 28 ரன்களை விளாசி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரை அர்ஷத் கான் வீசிய நிலையில் அதனை எதிர்கொண்ட ஆயூஷ் மாத்ரே முதல் பந்தில் 2 ரன்களை எடுத்த நிலையில், அடுத்த இரண்டு பந்துகளிலும் சிக்ஸர்களை விளாசி அசத்தினார். மேற்கொண்டு 4 மற்றும் 5ஆவது பந்துகளில் பவுண்டரிகளை அடித்த அவர், கடைசி பந்திலும் சிக்ஸரை விளாசி மொத்தமாக 28 ரன்களைச் சேர்த்தார். இந்நிலையில் ஆயூஷ் மாத்ரே அதிரடியாக விளையாடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
குஜராத் டைட்டன்ஸ்: ஷுப்மான் கில்(கேப்டன்), ஜோஸ் பட்லர், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷாருக் கான், ராகுல் தெவாடியா, ரஷித் கான், ஜெரால்ட் கோட்ஸி, ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், முகமது சிராஜ், அர்ஷத் கான், பிரசித் கிருஷ்ணா.
இம்பேக்ட் வீரர்கள்: சாய் சுதர்சன், அனுஜ் ராவத், மஹிபால் லோம்ரோர், வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் சர்மா.
சென்னை சூப்பர் கிங்ஸ்: ஆயுஷ் மத்ரே, டெவோன் கான்வே, உர்வில் படேல், ரவீந்திர ஜடேஜா, டெவால்ட் ப்ரீவிஸ், சிவம் துபே, தீபக் ஹூடா, எம்.எஸ். தோனி (வாரம்/சி), நூர் அகமது, அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது.
Also Read: LIVE Cricket Score
இம்பேக்ட் வீரர்கள்: மதீஷா பதிரானா, ரவிச்சந்திரன் அஸ்வின், விஜய் சங்கர், கம்ளேஷ் நாகர்கொட்டி