ஐசிசி தரவரிசை: முதலிடத்திற்கு முன்னேறி பாகிஸ்தான் அசத்தல்!

Updated: Sat, May 06 2023 13:06 IST
Image Source: Google

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி அங்கு நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 4-0 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இவ்விரு அணிகள் இடையிலான 5ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கராச்சியில் நாளை நடைபெறுகிறது.

தற்போது வரை ஒருநாள் தொடரை 4-0 என முன்னிலையில் உள்ள பாகிஸ்தான் அணி ஐசிசி ஒருநாள் அணிகளின் தரவரிசையில் முதல் இடத்துக்கு முன்னேறி அசத்தி உள்ளது. மேலும் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி முதல் முறையாக ஒருநாள் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளது.

ஐசிசி ஒருநாள் அணிகளின் தரவரிசையில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் 113 புள்ளிகளுடன் முதல் 3 இடங்களில் உள்ளன. இங்கிலாந்து அணி 111 புள்ளிகளுடன் 4ஆம் இடத்திலும், நியூசிலாந்து 107 புள்ளிகளுடன் 5ம் இடத்திலும் உள்ளன. 6 முதல் 10 இடங்களில் முறையே தென் ஆப்பிரிக்கா (101 புள்ளி), வங்கதேசம் (95 புள்ளி), இலங்கை (86 புள்ளி), வெஸ்ட் இண்டீஸ் (72 புள்ளி), ஆஃப்கானிஸ்தான் (71 புள்ளி) ஆகிய அணிகள் உள்ளன.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::