பாபர் ஆசாமிற்கு அபராதம் விதித்த காவல்துறை; விவரம் இதோ!

Updated: Tue, Sep 26 2023 15:29 IST
Image Source: Google

இந்தியாவில் நடைபெறும் ஐசிசி 2023 உலகக் கோப்பையை வெல்வதற்காக உலகின் அனைத்து அணிகளும் இறுதிக்கட்டமாக தயாராகி வருகின்றன. அதில் தங்களைப் புறக்கணித்து வரும் இந்தியாவிற்கு சொந்த மண்ணில் தோல்வியை பரிசளித்து 1992க்குப்பின் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கோப்பையை வென்று சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அந்நாட்டு முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடம் காணப்படுகிறது.

இருப்பினும் சமீபத்தில் நடைபெற்ற முடிந்த 2023 ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவிடம் வரலாறு காணாத அளவுக்கு 228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வியை சந்தித்தது. மேலும் கடைசியில் இலங்கையிடம் தோல்வியை சந்தித்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டதால் பாபர் அசாம் – சாஹீன் அஃப்ரிடி போன்ற முக்கிய வீரர்களுக்கு இடையே தோல்வியால் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. 

அது போக அத்தொடரில் சந்தித்த காயத்தால் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் நாசீம் ஷா காயத்தால் விலகியுள்ளது பாகிஸ்தானுக்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. இது போக இந்த குறைகளை நிறையாக்கி இந்திய மண்ணில் சரித்திரம் படைப்பதற்காக தயாராகும் பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்குவதில் தாமதம் செய்வதாக இந்தியா தாமதம் செய்வதாக நாட்டு வாரியம் நேற்று ஐசிசியிடம் புகார் செய்தது.

அதை தொடர்ந்து நேற்று மாலை அந்த அணியினருக்கும் ஆஃப்கானிஸ்தான் அணியினருக்கும் விசா வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் சாலை விதிமுறைகளை மீறி வாகனத்தை வாகனத்தை ஓட்டியதால் அபராதத்திற்கு உள்ளாகியுள்ளார் என்ற செய்திகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது கடந்த சில வாரங்களுக்கு முன்பாக லாகூரின் குல்பெர்க் நகரில் தம்முடைய விலை உயர்ந்த ஆடி காரில் பயணித்த பாபர் அசாம் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிவேகமாக சென்றதாக தெரிகிறது. அதனால் போக்குவரத்து காவல் துறையினர் அவரை தடுத்து நிறுத்தி அதற்கு அபராதம் விதிக்க முயற்சித்துள்ளனர். அப்போது அவர் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் காரை ஓட்டியதையும் காவல்துறையினர் கண்டறிந்தனர்.

அதன் காரணமாக 2 விதிமுறைகளை மீறியதால் இந்திய மதிப்பில் சுமார் 2000 ரூபாய் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் கராச்சி எனும் இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் இந்தியாவுக்கு வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் ஹைதராபாத் நகரில் தங்களுடைய முதல் பயிற்சி போட்டியில் விளையாடுகின்றனர். இருப்பினும் அதில் பாதுகாப்பு காரணங்களுக்காக ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை