வலை பயிற்சியில் காயமடைந்த பாபர் ஆசாம்; வைரலாகும் காணொளி!

Updated: Wed, Jul 17 2024 23:09 IST
Image Source: Google

பாகிஸ்தான் அணியின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக அறியப்படுபவர் பாபர் ஆசாம். மேலும் அணியின் கேப்டனாகவும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ள பாபர் ஆசாம், கடந்த சில மாதங்களாகவே தனது கேப்டன்சிக்காகவும், பேட்டிங் யுக்திகாகவும் அதிகமான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. அதிலும் கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியதையடுத்து, அந்த அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் விலகினார்.

ஒருநாள் உலகக் கோப்பையில், பாகிஸ்தான் அணி 9 லீக் ஆட்டங்களில் 4ல் மட்டுமே வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெறவில்லை.  மேற்கொண்டு பாபர் ஆசாமி அஸாமின் பேட்டிங்கும் சிறப்பாக இல்லை. அவர் 9 போட்டிகளில் 82.90 ஸ்ட்ரைக் ரேட்டில் 320 ரன்கமை மட்டுமே எடுத்திருந்தது. இதன் காரணமாக உலகக் கோப்பை தொடர் முடிந்த உடனேயே, அவர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலாக ஷஹீன் அஃப்ரிடி மற்றும் ஷான் மசூத் ஆகியோர் பாகிஸ்தானின் சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டன்களாக நியமிக்கப்பட்டனர்.

ஆனால் இருவரது கேப்டன்சியின் கீழும் பாகிஸ்தான் அணியானது அடுத்தடுத்த தோல்விகளைச் சந்தித்தது. இதனையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) பாபர் ஆசாமை இந்த ஆண்டு ஏப்ரலில் டி20 சர்வதேசப் போட்டியில் மீண்டும் கேப்டனாக நியமித்தது. இருப்பினும், பாபர் இதுவரை இந்த முடிவை நியாயப்படுத்தத் தவறிவிட்டார். அவரது தலைமையின் கீழ், அயர்லாந்திற்கு எதிரான டி20 தொடரை வென்றாலும், அதற்கு முன் நியூசிலாந்து அணிக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரை பாகிஸ்தான் சமன் செய்தது.

அதன் பிறகு இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரையும் இழந்தது. அதுமட்டுமில்லாமல் தலைமையில் கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரிலும் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அமெரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு எதிராக தோல்வியைத் தழுவி லீக் சுற்றுடனே வெளியேறிது. இத்தொடரிலும் அவர், 4 போட்டிகளில் 101.66 ஸ்ட்ரைக் ரேட்டில் 122 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் பாபர் ஆசாமின் பேட்டிங் மற்றும் கேப்டன்சி குறித்த விமர்சனங்களும் அதிகரித்தன. 

இதனையடுத்து பாபர் ஆசாமை கேப்டன் பதவியில் இருந்து நீக்குவது குறித்து பேச்சு வார்த்தைகளை பிசிபி நடத்தி வருகிறது. இதனால் இனியும் அவர் கேப்டனாக தொடர்வாரா அல்லது பொறுப்பில் இருந்து நீக்கப்படுவாரா என்பது குறித்து இனி வரும் நாள்களில் தெரியவரும். இந்நிலையில் பாபர் ஆசாம் வலைபயிற்சியில் வேகப்பந்து வீச்சாளரை எதிர்கொள்ள தடுமாறும் காணொளி ஒன்றானது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேற்கொண்டு அவர் வேகப்பந்து வீச்சாளருக்கு எதிராக காயமடைந்த நிகழ்வும் தற்சமயம் ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

அதன்படி, பாகிஸ்தானின் பாபர் ஆசாம் தனது சக அணி வீரர் நசீம் ஷாவின் சகோதரர் உபைத் ஷாவை எதிர்கொள்ளும் போது வலைகளில் போராடுவதை அக்காணொளியில் காணலாம். மேற்கொண்டு உபைத் ஷா பந்துவீச்சில் பாபர் ஆசம் ஒரு புல் ஷாட் ஆட முயன்றார். ஆனால் பந்தை சரியாக கணிக்க தவறிய பாபர் ஆசாம், பந்தை தவறவிட்டதுடன் அந்த பந்தில் காயமும் அடைந்தார். இதன் காரணமாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மீண்டும் பாபர் ஆசாமை கேலி செய்து வருகின்றனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை