PAK vs BAN: சர்வதேச கிரிக்கெட் புதிய மைல் கைல்லை எட்டுவாரா பாபர் ஆசாம்?

Updated: Thu, Aug 29 2024 12:16 IST
Image Source: Google

வங்கதேச அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராவல்பிண்டியில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியானது பாகிஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேச அணி தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்தும் சாதனை படைத்துள்ளது. 

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை (ஆகஸ்ட் 30) ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் ஏற்கெனவே வங்கதேச அணி வெற்றிபெற்றுள்ள நிலையில், இப்போட்டியானடி டிராவில் முடிவடைந்தாலும் வங்கதேச அணியானது தொடரை வென்று சாதனை படைக்கும். அதேசமயம், பாகிஸ்தான் அணி இப்போட்டியில் நிச்சயம் வெற்றிபெற்றால் மட்டுமே தொடரை சமன்செய்ய முடியும்.

இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேற்கொண்டு இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார். 

14 ஆயிரம் ரன்கள்

அதன்படி இப்போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் இந்த போட்டியில் 206 ரன்கள் எடுத்தால் சர்வதேச கிரிக்கெட்டில் 14,000 ரன்களை எட்டுவார். இதன்மூலம், இன்ஸாமாம் உல் ஹக், யூனிஸ் கான், முகமது யூசுப் மற்றும் ஜாவேத் மியாந்தத் ஆகியோரிருடன் இந்த சாதனையை படைக்கும் 5ஆவது வீராக பாபர் ஆசாம் இருப்பார்.  பாகிஸ்தான் அணிக்காக 2015ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான பாபர் ஆசாம் இதுநாள் வரை 293 போட்டிகளில் விளையாடி 326 இன்னிங்ஸ்களில் 13,794 ரன்களைச் சேர்த்துள்ளார். இதில் 31 சதங்களும், 94 அரைசதங்களையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

டெஸ்ட் கிரிக்கெட்டில் 4000 ரன்கள்

மேற்கொண்டு இப்போட்டியில் பாபர் ஆசாம் 80 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 4,000 ரன்களையும் அவர் கடக்கவுள்ளார். இத்தொடரில் அவர் இதனைக் கடக்கும் பட்சத்தில் பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்களை கடந்த 12ஆவது வீரர் எனும் பெருமையை பெறுவார். இதுவரை 53 டெஸ்ட் போட்டிகளில் 96 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் 45.05 சராசரியுடன் 3,920 ரன்கள் எடுத்துள்ளார்.

கோலி-கவாஸ்கரின் சிக்ஸர் சாதனை

Also Read: Funding To Save Test Cricket

அதுமட்டுமில்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் பாபர் இதுவரை 23 சிக்சர்களை அடித்துள்ளார். இந்த தொடரில் அவர் மேற்கொண்டு நான்கு சிக்ஸர்களை அடித்தால், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய ஜாம்பவான்கள் விராட் கோலி, சுனில் கவாஸ்கர் ஆகியோரை பின்னுக்கு தள்ளுவார். இதுவரை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோர் தலா 26 சிக்சர்களை அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை