ஜிம்பாப்வே, ஆஸ்திரேலிய தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
பாகிஸ்தான் அணி சமீபத்தியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் போட்டில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலைலையில், அடுத்தடுத்த போட்டிகளில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றதுடன் 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனைப்படைத்தது.
இதையடுத்து பாகிஸ்தான் அணி அடுத்ததாக ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி எதிவரும் நவம்பர் 04ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரும், நவம்பர் 14ஆம் தேதி டி20 தொடரும் நடைபெறவுள்ளது. அதேசமயம் இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணியையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்யும் பாகிஸ்தான் அணி அங்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது நவம்பர் 24ஆம் தேதி முதலும், டி20 தொடரானது டிசம்பர் 1ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடர்களுக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
அதன்படி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்கள் பாபர் ஆசாம், ஷாஹின் அஃப்ரிடி, நசீம் ஷா அகியோர் மீண்டும் அணிக்கு திரும்பவுள்ளனர். ஆனால் ஜிம்பாப்வே தொடரில் இவர்கள் மூவருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மற்றொரு நட்சத்திர வீரரான முகமது ரிஸ்வான் ஜிம்பாப்வே தொடருக்கான ஒருநாள் தொடரில் இடம்பிடித்துள்ள நிலையில், டி20 அணியில் இருந்து ஓய்வளிக்கப்பாட்டுள்ளது.
மேற்கொண்டு இத்தொடர்களுக்கான பாகிஸ்தான் அணியில் அறிமுக வீரர்கள் காம்ரன் குலாம், ஒமைர் யுசூஃப், சுஃபியான் மோகிம் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஒருநாள் தொடர்களுக்கான பாகிஸ்தான் அணியில் அமீர் ஜமால், அராபத் மின்ஹாஸ், பைசல் அக்ரம், ஹசிபுல்லா, முஹம்மது இர்பான் கான் மற்றும் சாம் அயூப் ஆகியோருக்கும் முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர்த்து ஆகா சல்மான், ஜஹான்தத் கான் அகியோர் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அத்போல் சல்மான் அலி ஆகா, அஹ்மத் டேனியல், ஹாரிஸ் ரவுஃப், ஹசீபுல்லா, முகமது ஹஸ்னைன், முஹம்மது இர்பான் கான் மற்றும் தயப் தாஹிர் ஆகியோர் ஆஸ்திரேலிய மற்றும் ஜிம்பாப்வே தொடர்களில் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் இத்தொடர்களுக்கான பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் யார் என்பது அறிவிக்கபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா தொடருக்கான பாகிஸ்தான் ஒருநாள் அணி: அமீர் ஜமால், அப்துல்லா ஷஃபீக், அராபத் மின்ஹாஸ், பாபர் ஆசம், பைசல் அக்ரம், ஹாரிஸ் ரவூஃப், ஹசீபுல்லா, கம்ரான் குலாம், முகமது ஹஸ்னைன், முகமது ரிஸ்வான், முகமது இர்ஃபான் கான், நசீம் ஷா, சைம் அயூப், சல்மான் அலி ஆகா, ஷாஹீன் ஷா அஃப்ரிடி
ஆஸ்திரேலிய தொடருக்கான பாகிஸ்தான் டி20 அணி: அராபத் மின்ஹாஸ், பாபர் ஆசம், ஹாரிஸ் ரவுஃப், ஹசீபுல்லா, ஜஹந்தத் கான், முகமது அப்பாஸ் அஃப்ரிடி, முகமது ரிஸ்வான், முகமது இர்பான் கான், நசீம் ஷா, உமைர் பின் யூசுப், சாஹிப்ஜாதா ஃபர்ஹான், சல்மான் அலி ஆகா, ஷஹீன் ஷா அஃப்ரிடி, சுஃப்யான் முகிம், உஸ்மான் கான்.
ஜிம்பாப்வே தொடருக்கான் பாகிஸ்தான் ஒருநாள் அணி: அமீர் ஜமால், அப்துல்லா ஷஃபீக், அப்ரார் அகமது, அகமது டேனியல், பைசல் அக்ரம், ஹாரிஸ் ரவுஃப், ஹசீபுல்லா, கம்ரான் குலாம், முகமது ஹஸ்னைன், முகமது ரிஸ்வான், முகமது இர்பான் கான், சைம் அயூப், சல்மான் அலி ஆகா, ஷாநவாஸ் தஹானி, தயப் தாஹிர்.
Also Read: Funding To Save Test Cricket
ஜிம்பாப்வே தொடருக்கான பாகிஸ்தான் டி20 அணி: அகமது டேனியல், அராபத் மின்ஹாஸ், ஹாரிஸ் ரவுஃப், ஹசீபுல்லா, ஜஹந்தத் கான், முகமது அப்பாஸ் அஃப்ரிடி, முகமது ஹஸ்னைன், முகமது இர்பான் கான், உமைர் பின் யூசுப், காசிம் அக்ரம், சாஹிப்சாதா ஃபர்ஹான், சல்மான் அலி ஆகா, சுஃப்யான் முகிம், தயப் தாஹிர், உஸ்மான் கான்.