ENG vs IND, 5th Test: விராட் கோலியுடனான மோதல் குறித்து விளக்கமளித்த பேர்ஸ்டோவ்!

Updated: Mon, Jul 04 2022 12:55 IST
Bairstow Calls A Verbal Exchange With Virat 'Part & Parcel' Of The Game (Image Source: Google)

பிர்மிங்கமில் நடைபெற்றுவரும் 5ஆவது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 84.5 ஓவர்களில் 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி, 61.3 ஓவர்களில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சதமடித்த பேர்ஸ்டோவ், 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிராஜ் 4, பும்ரா 3, ஷமி 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். 

இதன்மூலம் 3ஆம் நாள் முடிவில் இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸில்  45 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. பும்ரா 50, ரிஷப் பந்த் 30 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து இன்னிங்ஸில் கோலி - பேர்ஸ்டோவ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உன் வேலையை மட்டும் பார் என கோலி சைகையில் பேர்ஸ்டோவிடம் கூறியது போல இருந்தது. எனினும் பேர்ஸ்டோ சதமடித்தபோது கோலி கைத்தட்டி பாராட்டு தெரிவித்தார். 

இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் பற்றி பேர்ஸ்டோவ் கூறுகையில், “இருவரும் 10 வருடங்களாகக் களத்தில் சந்தித்து வருகிறோம். அது கொஞ்சம் ஜாலியானது. இருவரும் போட்டி மனப்பான்மையுடன் களத்தில் செயல்படுவோம். 

நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுகிறோம். இருவருமே தீவிரமான போட்டியாளர்கள். இந்தப் போட்டி மனப்பான்மை எங்களுடைய சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்த உதவுகிறது. இது விளையாட்டின் ஓர் அங்கம்” என்று தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை