BAN vs AFG: ஆஃப்கானை வீழ்த்தியது வங்கதேசம்!

Updated: Wed, Feb 23 2022 20:05 IST
BAN vs AFG, 1st ODI: Bangladesh Pair Record 2nd Highest 7th Wicket Partnership In ODIs To Take Team (Image Source: Google)

வங்கதேசம் - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.

அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக நஜிபுல்லா ஸத்ரான் 67 ரன்களைச் சேர்த்தார். 

இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி தொடக்கத்திலேயே தமிம் இக்பால், லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன், முஷ்பிக்கூர் ரஹிம், யாசிர் அலி, மஹ்முதுல்லா ஆகியோர் ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

இதனால் 45 ரன்களுக்குள்ளாகவே 6 விக்கெட்டுகளை இழந்து வங்கதேச அணி தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த அஃபிஃப் ஹொசைன் - மெஹிதி ஹசன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினர். 

இறுதிவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதனால் 48.5 ஓவர்கள் முடிவில் அந்த அணி இலக்கை அடைந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தியது. 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அஃபிஃப் ஹொசைன் 93 ரன்களையும், மெஹிதி ஹசன் 81 ரன்களையும் சேர்த்தனர். ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் ஃபசல்ஹக் ஃபாரூக்கி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை