BAN vs AUS : மார்ஷ், ஹென்ரிக்ஸ் அசத்தல்; வங்கதேசத்திற்கு 122 ரன்கள் இலக்கு!

Updated: Wed, Aug 04 2021 19:16 IST
BAN vs AUS : Bangladesh restrict Australia by 121 runs (Image Source: Google)

வங்கதேசம் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி தாக்காவில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. 

இதையடுத்து தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜோஷ் பிலிப்பே, அலெக்ஸ் கேரி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷ் - ஹென்ரிக்ஸ் இணை தொடக்கத்தில் நிதானமாக விளையாடினாலும், பின்னர் பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 

இதில் ஹென்ரிக்ஸ் 30 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, மறுமுனையில் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மிட்செல் மார்ஷ் 45 ரன்களில் விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினார். 

பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி  7 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்களை அட்டுமே எடுத்தது. வங்கதேச அணி தரப்பில் முஸ்தபுசூர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை