BAN vs ENG, 2nd T20I: இங்கிலாந்தை 117 ரன்களில் சுருட்டியது வங்கதேசம்!

Updated: Sun, Mar 12 2023 16:15 IST
Image Source: Google

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் வங்கதேசம் வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று தாக்காவில் நடைபெற்று வருகிறது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் டேவிட் மாலன் 5 ரன்களில் அட்டமிழக்க, அடுத்து வந்த மொயீன் அலியும் 15 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனார். அவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான பிலிப் சால்ட்டும் 25 ரன்களுக்கு நடையைக் கட்டினார். 

அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஜோஸ் பட்லர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அவரும் 4 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவாரைத்தொடர்ந்து வந்த சாம் கரன், கிறிஸ் வோக்ஸ் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதற்கிடையில் நிதானமாக விளையாடிய பென் டக்கெட்டும் 28 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச தரப்பில் மெஹிதி ஹசன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை