BAN vs IND, 1st Test: விசா பிரச்சனையால் பறிபோகும் உனாத்கட்டின் வாய்ப்பு; ரசிகர்கள் சோகம்!

Updated: Tue, Dec 13 2022 22:47 IST
Image Source: Google

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த டெஸ்ட் தொடர் நாளை தொடங்க உள்ளது.

இதனிடையே வங்கதேச அணியுடனான 2வது ஒருநாள் போட்டியின் போது இந்திய கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக வெளியேறினார். அதேபோல் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி ஆகியோர் காயமடைந்தனர். அதுமட்டுமல்லாமல் ஜடேஜாவும் முழுமையாக காயத்தில் இருந்து குணமடையவில்லை.

இதனால் ரோஹித் சர்மா மற்றும் முகமது ஷமி ஆகியோருக்கான மாற்று வீரர்கள் யார் என்று தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் ரோஹித் சர்மாவுக்கான மாற்று வீரராக இந்திய ஏ அணியின் கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரனும், முகமது ஷமிக்கான மாற்று வீரராக அனுபவ வீரர் ஜெய்தேவ் உனாத்கட்-ம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் உள்ள ஸாஹூர் அகமது மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே உனாத்கட் வங்கதேசம் செல்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

வங்கதேச டெஸ்ட் தொடருக்கு உனாத்கட் திடீரென தேர்வு செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு விசா கிடைக்காமல் தவித்து வருகிறார். இதனால் வங்கதேசத்தில் இந்திய அணியுடன் பயிற்சியில் ஈடுபட வேண்டிய உனாத்கட், தற்போது ராக்ஜோட்டில் தவித்து வருகிறார். எப்போதும் இந்திய வீரர்களுக்கான விசா உள்ளிட்ட தேவைகளை பிசிசிஐ நிர்வாகம் முன்னதாகவே செய்து முடிக்கும். ஆனால் உனாத்கட் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்பது அனைவரும் எதிர்பாராத ஒன்று.

இதனால் விசா பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எப்படி இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன் உனாத்கட் வங்கதேசம் செல்வார் என்று பிசிசிஐ நிர்வாகிகள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 12 ஆண்டுகள் கடுமையான போராட்டத்திற்கு பின் உனாத்கட், மீண்டும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் எதிர்பாராத வகையில், விசா பிரச்சினையில் முதல் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை