BAN vs NZ: பரபரப்பான ஆட்டத்தில் வங்கதேசம் அபார வெற்றி!

Updated: Fri, Sep 03 2021 19:03 IST
Image Source: Google

வங்கதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்று. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி மஹ்மதுல்லாவின் அதிரடியான ஆட்டத்தால், 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களைச் சேர்த்தது.

இதில் அதிகபட்சமாக முகமது நைம் 39 ரன்களையும், மஹ்மதுல்லா 37 ரன்களையும் எடுத்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் ரச்சின் ரவீந்திரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை துரத்திய நியூசிலாந்து அணியில் டாம் பிளண்டல் 6 ரன்களிலும், ரச்சின் ரவீந்திரா 10 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் டாம் லேதம் - வில் யங் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது. பின் 22 ரன்களில் வில் யங் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கிராண்ட்ஹோம், ஹென்றி நிக்கோலஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டாம் லேதம் அரைசதம் கடந்தார். பின் கடைசி 6 பந்துகளில் நியூசிலாந்து வெற்றிபெற 20 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. 

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

ஆனால் கடைசி ஓவரில் நியூசிலாது அணியால் 15 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன் மூலம் வங்கதேச அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி, டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டாம் லேதம் 67 ரன்களைச் சேர்த்திருந்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை