BAN vs NZ: 60 ரன்னில் நியூசிலாந்தை சுருட்டியது வங்கதேசம்!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி இன்று தாக்காவில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி தொடக்கம் முதலே எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தது. இதில் வில் யங், ரச்சின் ரவீந்திரா, டாம் பிளெண்டல், கிராண்ட்ஹோம் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களோடு வெளியேறினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்து விளையாடிய கேப்டன் லேதம் - ஹென்றி நிக்கோலஸ் இணை சிறிதுநேரம் தாக்குப்பிடித்து விளையாடியது. பின் இருவரும் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சைஃபுதீன் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறியதால், 16.5 ஓவர்களிலேயே நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 60 ரன்களை மட்டுமே எடுத்தது.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
வங்கதேச அணி தரப்பில் முஸ்தபிசூர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும், ஷகிப் அல் ஹசன், நசும் அஹ்மத், சைஃபுதின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.