BAN vs NZ: டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்!

Updated: Fri, Sep 10 2021 15:30 IST
BAN vs NZ: New Zealand have won the toss and have opted to bat (Image Source: Google)

வங்கதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் தாக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் வங்கதேசம் அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. 

ஏற்கெனவே வங்கதேசத்துடன் தொடரை இழந்துள்ள நியூசிலாந்து அணி, இப்போட்டியில் ஆறுதல் வெற்றியையாவது பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

வங்கதேசம்: முகமது நைம், லிட்டன் தாஸ், சௌமியா சர்கார், முஷ்பிக்கூர் ரஹிம், அஃபிஃப் ஹொசைன், நூருல் ஹசன், மஹ்முதுல்லா (கே), ஷமிம் ஹொசைன், நசும் அஹ்மத், டாஸ்கின் அஹ்மத், ஷோரிஃபுல் இஸ்லாம்

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

நியூசிலாந்து : ஃபின் ஆலன், ரச்சின் ரவீந்திரா, வில் யங், காலின் டி கிராண்ட்ஹோம், டாம் லாதம் (கே), ஹென்றி நிக்கோலஸ், கோல் மெக்கோன்சி, ஸ்காட் குகலீன், அஜாஸ் பட்டேல், ஜேக்கப் டஃபி, பென் சியர்ஸ். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை