BAN vs PAK, 3rd T20I: தட்டுத்தடுமாறி 124 ரன்களைச் சேர்த்த வங்கதேசம்!

Updated: Mon, Nov 22 2021 15:09 IST
BAN vs PAK, 3rd T20I: Pakistan again restricted Bangladesh by low score (Image Source: Google)

வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி தாக்காவில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது. 

இந்நிலையில் மூன்றாவது டி20 போட்டியிலும் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் நஜ்முல் ஹுசேன் 5 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

அடுத்து களமிறங்கிய ஷாமிம் ஹொசைன் 22 ரன்னிலும், அஃபிஃபி ஹொசைன் 20 ரன்னிலும் உஸ்மான் காதிர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து நடையைக் கட்டினர். 

இருப்பினும் மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முகமது நைம் பொறுமையாக விளையாடி 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

அடுத்து வந்த கேப்டன் மஹ்முதுல்லா, நூருல் ஹசன் ஆகியோரும் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்குச் சென்றனர். 

Also Read: T20 World Cup 2021

இதனால் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை மட்டும் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர் முகமது நைம் 47 ரன்களைச் சேர்த்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை