BAN vs PAK, 3rd T20I: வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் வாய்ப்பு பெற்ற சாஹிப்சாதா ஃபர்ஹான் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார். 

Advertisement

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள முதலிரண்டு போட்டியின் முடிவில் வங்கதேச அணி இரண்டு போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை வென்றுள்ளது.  இதையடுத்து வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று தாக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சைம் அயூப் - சாஹிப்சாதா ஃபர்ஹான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடிய ஃபர்ஹான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 82 ரன்களை எட்டிய நிலையில், சைம் அயூப் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து 6 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 63 ரன்களை எடுத்திருந்த ஃபர்ஹானும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய முகமது ஹாரிஸ் 5 ரன்னிலும், அதிரடியாக விளையாடிய ஹசன் நவாஸ் 33 ரன்னிலும், ஹுசைன்  தாலத் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். 

Also Read: LIVE Cricket Score

பின்னர் இணைந்த கேப்டன் சல்மான் ஆகா மற்றும் முகமது நவாஸ் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் முகமது நவாஸ் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 27 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இறுதிவரை களத்தில் இருந்த சல்மான் ஆகா 12 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களைச் சேர்த்துள்ளது. வங்கதேச அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய தஸ்கின் அஹ்மத் 3 விக்கெட்டுகளையும், நசும் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News