மீண்டும் மீண்டும் சர்ச்சையை கிளப்பும் மூன்றாம் நடுவரின் தீர்ப்பு; வங்கதேசம் - இலங்கை போட்டியில் பரபரப்பு!

Updated: Thu, Mar 07 2024 11:33 IST
மீண்டும் மீண்டும் சர்ச்சையை கிளப்பும் மூன்றாம் நடுவரின் தீர்ப்பு; வங்கதேசம் - இலங்கை போட்டியில் பரபர (Image Source: Google)

இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. 

இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை மட்டுமே சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 37 ரன்களையும், குசால் மெண்டிஸ் 36 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் தஸ்கின், மெஹிதி, முஸ்தஃபிசூர், சௌமியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியில் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ அரைசதம் கடந்ததுடன், ஆட்டமிழக்காமல் 53 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்ற்யைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் வங்கதேச அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் வங்கதேச அணி 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்தது. 

இந்நிலையில் இப்போட்டியில் மூன்றாம் நடுவர் வழங்கிய தீர்ப்பு தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அதன்படி, இப்போட்டியில் வங்கதேச அணி பேட்டிங் செய்த போது இன்னிங்ஸின் நான்காவது ஓவரை பினூரா ஃபெர்னாண்டோ வீசியனார். அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட சௌமியா சர்கார் பந்தை அடிக்க முயற்சித்தார். ஆனால் பந்து எட்ஜில் பட்டு, கீப்பரிடம் தஞ்சமடைந்தது. 

இதையடுத்து கள நடுவரும் அவுட் கொடுத்தார். ஆனால் சௌமியா சர்க்கர் டிஆர்எஸ் முறையில் மூன்றாம் நடுவரிடம். அதனை மூன்றாம் நடுவர் சோதிக்கையில் பந்து பேட்டில் பட்டது போன்று பெரிய திரையில் காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால் மூன்றாம் நடுவர் இதற்கு நாட் அவுட் என தீர்ப்பு வழங்கியதும் மைதானத்தில் இருந்த நடுவர்கள் முதல் அனைவரும் ஒன்றும் புரியாமல் இருந்தனர். 

 

இதனால் இலங்கை அணி வீரர்கள் ஒட்டுமொத்தமாக இணைந்து கள நடுவரிடம் முறையிட்டனர். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆனாலும் களநடுவர்கள் மூன்றாம் நடுவரின் முடிவை ஏற்று சௌமியா சர்க்காரை மீண்டும் பேட்டிங் செய்ய அனுமதிக்கப்பட்டார். இதனை சற்றும் எதிர்பார்க்காத இலங்கை அணி வீரர்கள் விரக்தியுடன் மீண்டும் விளையாடினர். இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை