இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேசம், நியூசிலாந்து & இங்கிலாந்து!

Updated: Thu, Jun 20 2024 20:20 IST
Image Source: Google

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் பங்கேற்றுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், சூப்பர் 8 சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இத்தொடரை தொடர்ந்து இந்திய அணியானது ஜிம்பாப்வே மற்றும் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. 

இந்நிலையில் 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளுக்கான இந்திய அணி தங்களுடையை சொந்த மண்ணில் விளையாடும் தொடர்களின் அறிவிப்பினை பிசிசிஐ இன்றைய தினம் அறிவித்துள்ளது. அந்தவகையில் வங்கதே அணியானது வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. 

அதனைத்தொடர்ந்து வருகின்ற அக்டோபர் மாதம் நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்பின் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. 

 

இந்திய - வங்கதேசம் போட்டி அட்டவணை

  • முதல் டெஸ்ட்: செப்டம்பர் 19-23, 2024, சென்னை
  • 2வது டெஸ்ட்: செப்டம்பர் 27-அக்டோபர் 1, கான்பூர்
  • முதம் டி20ஐ: அக்டோபர் 6, தர்மசாலா
  • இரண்டாவது டி20ஐ: அக்டோபர் 9, டெல்லி
  • மூன்றாவது டி20ஐ: அக்டோபர் 12, ஹைதராபாத்

இந்தியா - நியூசிலாந்து போட்டி அட்டவணை

  • முதல் டெஸ்ட்: அக்டோபர் 16-20, பெங்களூரு
  • இரண்டாவது டெஸ்ட்: அக்டோபர் 24-28, புனே
  • மூன்றாவது டெஸ்ட்: நவம்பர் 1-5, மும்பை

இந்தியா - இங்கிலாந்து போட்டி அட்டவணை

  • முதல் டி20ஐ: ஜனவரி 22, 2025, சென்னை
  • 2ஆவது டி20ஐ: ஜனவரி 25, கொல்கத்தா
  • 3ஆவது டி20ஐ: ஜனவரி 28, ராஜ்கோட்
  • 4ஆவது டி20ஐ: ஜனவரி 31, புனே
  • 5ஆவது டி20ஐ: பிப்ரவரி 2, மும்பை
  • முத ஒருநாள் போட்டி: பிப்ரவரி 6, நாக்பூர்
  • 2ஆவது ஒருநாள் போட்டி: பிப்ரவரி 9, கட்டாக்
  • 3ஆவது ஒருநாள் போட்டி: பிப்ரவரி 12, அஹ்மதாபாத்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை