மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஸ்காட்லாந்தை வீழ்த்தி வங்கதேசம் அசத்தல் வெற்றி!

Updated: Thu, Oct 03 2024 20:21 IST
Image Source: Google

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்த  சீசனானது இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக தொடங்கியது. அதன்பின் இத்தொடரின் முதல் லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள வங்கதேசம் மற்றும் ஸ்காட்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

ஷார்ஜாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, களமிறங்கிய வங்கதேச மகளிர் அணிக்கு சதி ராணி மற்றும் முர்ஷிதா கதுன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முர்ஷிதா கதுன் 12 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனை சதி ராணி 29 ரன்களிலும் விக்கெட்டை இழந்தர். பின்னர் களமிறங்கிய ஷோபனா ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுமுனையில் களமிறங்கிய தாஜ் நிஹார் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் நிகர் சுல்தானா 18 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். 

அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷோபனாவும் 36 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய வீராங்கனைகள் பெரிதளவி ரன்களைச் சேர்க்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.இதனால் வங்கதேச மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்களை மட்டுமே எடுத்தது. ஸ்காட்லாந்து அணி தரப்பில் சஸ்கியா ஹார்லே 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து களமிறங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீராங்கனை சஸ்கியா ஹார்லே 8 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அதேசமயம் அணியின் மற்றொரு தொடக்க வீராங்கனை சாரா பிரைஸ் ஒருபக்கம் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தி வந்த நிலையில், மறுபக்கம் களமிறங்கிய கேப்டன் கேத்ரின் பிரைஸ் 11 ரன்களுக்கும், அலிசா லிஸ்டர் 11 ரன்களுக்கும், சேட்டர்ஜி 5 ரன்களிலும், டர்சி கார்ட்டர் 2 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீராங்கனைகளும் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறினர். அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சாரா பிரைஸும் 49 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார். 

Also Read: Funding To Save Test Cricket

இதனால் ஸ்காட்லாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை மட்டுமே சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் ரிது மோனி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் வங்கதேச மகளிர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து மகளிர் அணியை வீழ்த்தி நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை