ஆசிய கோப்பை 2023 தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் கோலாகலமாக தொடங்குகிறது. மொத்தம் 6 கிரிக்கெட் அணிகள் கோப்பையை வெல்வதற்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன. வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்த தொடர் இம்முறை ஒருநாள் போட்டிகளாக நடைபெற உள்ளது.

Advertisement

அதில் பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், நேபாள் ஆகிய 6 அணிகள் கோப்பையை வெல்வதற்காக மோத உள்ளன. இந்த 6 அணிகளும் குரூப் ஏ மற்றும் பி ஆகிய 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் தலா ஒரு முறை மோத உள்ளன. அதில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். அதில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மாபெரும் இறுதிப்போட்டியில் கோப்பையை வெல்வதற்காக மோதும் என்ற வகையில் இந்த தொடரின் ஃபார்மட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

அந்த வகையில் அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தத் தொடரில் கோப்பையை வெல்வதற்காக வங்கதேச அணி தற்போது இறுதிக்கட்ட பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் உச்சகட்டமாக வங்கதேச தொடக்க வீரர் முகமது நைம் இந்த ஆசிய கோப்பையில் அதிரடியாக விளையாடுவதற்காக நெருப்பு மீது நடந்து வித்தியாசமான அனல் பறக்கும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதாவது நெருப்பு மீது நடப்பது மனதளவில் அமைதியை ஏற்படுத்தும் என்பதால் அந்த வகையான பயிற்சியை அவர் பயிற்சியாளர் வழிகாட்டுதலுடன் எடுத்து வருகிறார்.

குறிப்பாக இரவு நேரத்தில் சுமார் 3 – 5 அடி அளவுக்கு நெருப்பை மூட்டி அதில் முகமது நைம் கூலாக நடந்து சென்று பயிற்சிகளை எடுத்த போது அவருடைய பயிற்சியாளர் கைதட்டி பாராட்டிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட்டில் இதற்கு முன் எத்தனையோ பயிற்சிகளை பார்த்துள்ள ரசிகர்களுக்கு இப்படி ஒரு புதுமையான பயிற்சியை வங்கதேச வீரர்கள் மேற்கொள்வது திரும்பிப் பார்க்கும் வகையில் அமைந்துள்ளது.

 

ஏனெனில் வரலாற்றில் பல ஜாம்பவான் வீரர்கள் யாருமே இப்படி நெருப்பு மீது நடந்து வித்தியாசமான பயிற்சிகளை மேற்கொண்டதே இல்லை. மேலும் இது போன்ற பயிற்சியை மேற்கொள்ளும் போது காலில் காயங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உருவாகும் என்பதால் போட்டிகளில் விளையாடுவதில் சிக்கல்கள் ஏற்படலாம். இருப்பினும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இப்படி நெருப்பு மீது நடந்து வங்கதேச வீரர்கள் பயிற்சிகளை மேற்கொள்வதை பார்க்கும் ரசிகர்கள் வியப்படைந்துள்ளனர்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News