ஐபிஎல் 2023: தொடரிலிருந்து விலகினார் ஷாகிப் அல் ஹசன்!
இந்தியாவில் நடைபெறும் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளது. அதன்படி கடந்த 2008 ஆம் ஆண்டு பிசிசிஐ தொடங்கிய ஐபிஎல் டி20 தொடர் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது.
இந்த நிலையில் 16ஆவது ஐபிஎல் சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் தற்போது 5 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இனி நடைபெறும் போட்டிகள் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து வங்கதேச அணியின் அதிரடி ஆல்ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன் விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த வகையில் வங்கதேச அணி வரும் மே 14ஆம் தேதி வரை அயர்லாந்து அணியுடன் விளையாட உள்ளது. அதன் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ஷாகிப் அல் ஹசன் விலகியுள்ளார்.
ஏற்கனவே கொல்கத்தா அணியில் காயம் காரணமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் விலகியுள்ளார். தற்போது ஷாகிப் அல் ஹசனும் அந்த அணியிலிருந்து விலகியுள்ளது கடும் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.