BAN vs NED, 2nd T20I: நெதர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது வங்கதேசம்!

Updated: Mon, Sep 01 2025 21:20 IST
Image Source: Google

BAN vs NED, 2nd T20I: நெதர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் வங்கதேச அணி வெற்றி பெற்றதன்  மூலம், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 09ஆம் தேதி 09ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக வங்கதேச அணி, நெதர்லாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் நடந்த முடிந்த முதல் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று சில்ஹெட்டில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி எதிரணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அணியின் நட்சத்திர வீரர்கள் மேக்ஸ் ஓடவுட் 8 ரன்களுக்கும், தேஜா நிடமனுரு ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 9 ரன்களுக்கும், ஷரிஸ் அஹ்மத் 12 ரன்களுக்கும், நோவ கிராஸ் மற்றும் சிகந்தர் சுல்ஃபிகர் ஆகியோர் தலா 2 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். மேற்கொண்டு மறுபக்கம் ஓரளவு தாக்குப்பிடித்டு விளையாடிய விக்ரம்ஜித் சிங்கும் 24 ரன்களுடன் நடையைக் கட்டினார். 

அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஆர்யன் தத் ஓரளவு அதிரடியாக விளையாடி 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 30 ரன்களைச் சேர்த்த் நிலையில், மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். இத்னால் ஜிம்பாப்வே அணி 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்களில் ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் நசும் அஹ்மத் 3 விக்கெட்டுகளையும், தஸ்கின் அஹ்மத், முஸ்தஃபிசூர் ரஹ்மான் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணிக்கு பர்வெஸ் ஹொசைன் - தன்ஸித் ஹசன் தொடக்கம் கொடுத்தனர். 

Also Read: LIVE Cricket Score

இதில் பர்வேஸ் ஹொசைன் 23 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். பின்னர் தன்ஸித்துடன் இணைந்த லிட்டன் தாஸும் அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தன்ஸித் ஹசன் அரைசதம் கடந்ததுடன் 54 ரன்களையும், லிட்டன் தாஸ் 18 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் வங்கதேச அணி 13.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 2-0 என்ற கணககில் கைப்பற்றியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை