டெஸ்ட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் புறப்பட்ட வங்கதேச அணி!
வங்கதேச அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 03ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 20 முதல் 25ஆம் தேதிவரை ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 03ஆம் தேதி வரையில் கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான பாகிஸ்தான் அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஷான் மசூத் தலைமையிலான இந்த அணியில் சௌத் சகீல் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து இத்தொடருக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. நஜ்முல் ஹொசைன் தலைமையிலான இந்த அணியில் அனுபவ வீரர் ஷாகிப் அல் ஹசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் நட்சத்திர வீரர்களான தஸ்கின் அஹ்மத், முஷ்பிக்கூர் ரஹிம், லிட்டன் தாஸ், மெஹதி ஹசன், ஷொரிஃபுல் இஸ்லாம், மொமினுல் ஹக் உள்ளிட்டோருக்கும் இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக வங்கதேச அணி வீரர்கள் இன்று பாகிஸ்தான் செல்லவுள்ளனர். அதன்படி நாளை லாகூர் செல்லும் வங்கதேச அணியானது ஆகஸ்ட் 14 முதல் 16ஆம் தேதி வரை கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சியை மேற்கொள்ளவுள்ளது. அதன்பின் ஆகஸ்ட் 17ஆம் தேதி இஸ்லாமாபாத் செல்லும் வங்கதேச அணி, ஆகஸ்ட் 18 முதல் 20ஆம் தேதிவரை ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் தங்களது பயிற்சியை தொடரும் என்று தெரிவிக்கவிப்பட்டுள்ளது.
வங்கதேச டெஸ்ட் அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், ஷத்மான் இஸ்லாம், மொமினுல் ஹக், முஷ்பிக்கூர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் குமார் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், நஹித் ராணா, ஷோரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத், தஸ்கின் அகமது, சையத் காலித் அகமது.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
பாகிஸ்தான் அணி: ஷான் மசூத் (கே), சவுத் ஷகீல், அமீர் ஜமால் (உடற்தகுதிக்கு உட்பட்டு), அப்துல்லா ஷபீக், அப்ரார் அகமது, பாபர் ஆசாம், காம்ரன் குலாம், குர்ரம் ஷாஸாத், மிர் ஹம்சா, முகமது அலி, முகமது ஹுரைரா, முகமது ரிஸ்வான், நசீம் ஷா, சைம் அயூப், சல்மான் அலி ஆகா, சர்ஃபராஸ் அகமது, ஷாஹீன் அஃப்ரிடி