CT2025: வங்கதேச அணி அறிவிப்பு; லிட்டன் தாஸ், ஷாகில் அல் ஹசனுக்கு இடமில்லை!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது ஹைபிரிட் மாடலில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரங்களில் நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன. அதன்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது எதிர்வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.
இதில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது. மேற்கொண்டு 8 அணிகளும் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. மேலும் இத்தொடருக்கான அணிகளை அறிவிக்க இன்றே (ஜன.12) கடைசி நாள் என ஐசிசி கெடுவித்திருந்தது.
இதில் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை காரணம் காட்டி பிசிசிஐ இத்தொடருக்கான இந்திய அணியை அறிவிப்பதற்கு கூடுதல் கால அவகாசம் கேட்டுள்ளது. இதுதவிர்த்து தற்போது வரை ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியும் அறிவிக்காப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியாம் இன்று அறிவித்துள்ளது.
இத்தொடருக்கான வங்கதேச அணியின் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ தொடர்கிறார். முன்னதாக வங்காதேச டெஸ்ட் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் பதவியில் இருந்து நஜ்முல் ஹொசைன் சாண்டோ விலகிய நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான வங்கதேச அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் நட்சத்திர ஆல் ரவுண்டார் ஷாகிப் அல் ஹசனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
சமீபத்தில் நடைபெற்ற பந்துவீச்சு சோதனையில் ஷாகிப் ஆல் ஹசன் தோல்வியடைந்ததை அடுத்து, இத்தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுதவிர்த்து அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான லிட்டன் தாஸுக்கு இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் வங்கதேச அணியின் கேப்டனாக செயல்பட்ட அவர், அதில் சோபிக்க தவறியதன் காரணமாக ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
வங்கதேச அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ(கேப்டன்), சௌமியா சர்க்கார், தன்ஸித் ஹசன், தாவ்ஹித் ஹ்ரிடோய், முஷ்ஃபிக்கூர் ரஹீம், மஹ்மூதுள்ளா, ஜக்கர் அலி அனிக், மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அஹ்மத், முஸ்தஃபிசூர் ரஹ்மான், பர்வேஸ் ஹொசைன் எமன், நசும் அஹ்மத், தன்சிம் ஹசன் ஷாகிப், நஹித் ராணா.
Also Read: Funding To Save Test Cricket
வங்கதேச அணி அட்டவணை
- பிப்ரவரி 20 - வங்கதேசம் vs இந்தியா, துபாய்
- பிப்ரவரி 24 - வங்கதேசம் vs நியூசிலாந்து, ராவல்பிண்டி
- பிப்ரவரி 27 - பாகிஸ்தான் vs வங்கதேசம், ராவல்பிண்டி