போட்டி முன்னோட்டம்: வங்கதேசம் vs இலங்கை!

Updated: Fri, May 21 2021 22:31 IST
Image Source: Google

இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (மே 23) தாக்காவில் நடைபெறவுள்ளது. 

போட்டி தகவல்கள்

  • தேதி : மே 23, 2021, ஞாயிற்றுக்கிழமை
  • நேரம் : மதியம் 12.30 மணி 
  • மைதானம்: ஷேர் பங்களா தேசிய மைதானம், தாக்கா.

போட்டி முன்னோட்டம்

வங்கதேசம்

வங்கதேச அணி சமீபத்தில் நியூசிலாந்து அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநள் தொடரை 3-0 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்தது. 

இதனால் இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குகிறது. 

வங்கதேச அணியில் தமிம் இக்பால், ஷாகிப் அல் ஹசன், முஸ்பிக்கூர் ரஹீம், முஸ்தபிசூர் ரஹ்மான் ஆகியோர் இருப்பதால், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பலமாகவே உள்ளது. 

இலங்கை

இலங்கை அணியில் தினேஷ் சண்டிமல், அஜந்தா மெண்டீஸ் ஆகியோரை அணியிலிருந்து நீக்கி, குசால் பெரேராவிற்கு கேப்டன்சி கொடுக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் மற்றோரு இளம் வீரரான குசால் மெண்டீஸிற்கு துணைக் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதுமுக வீரர்களுடன் இலங்கை அணி இத்தொடரை எதிர்கொள்ள உள்ளதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

நேருக்கு நேர்

இலங்கை - வங்கதேச அணிகள் இதுவரை 48 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இலங்கை அணி 39 முறையும், வங்கதேச அணி 7 முறையையும் வெற்றி பெற்றுள்ளன. இதில் இரண்டு போட்டிகள் முடிவின்றி அமைந்துள்ளது. 

உத்தேச அணி

வங்கதேச அணி: தமீம் இக்பால் (இ), லிட்டன் தாஸ், சௌமியா சர்க்கார், முஷ்ஃபிகூர் ரஹீம், முகமது மிதுன், மஹ்மதுல்லா, ஷாகிப் அல் ஹசன், மெஹிதி ஹசன், டாஸ்கின் அகமது, முஸ்தாபிஸூர் ரஹ்மான், ரூபல் ஹொசைன்

இலங்கை: தனுஷ்கா குணதிலகா, குசல் பெரேரா (கேப்டன்), பாதும் நிசங்கா, ரமேஷ் மெண்டிஸ், தாசுன் ஷானகா, தனஞ்சய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்லா, லக்ஷன் சண்டகன், வனிந்து ஹசரங்கா, இசுரு உதனா, அசிதா ஃபெர்னாண்டோ.

ஃபேண்டஸி லெவன் குறிப்பு

  • விக்கெட் கீப்பர்கள் - முஷ்ஃபிகூ ரஹீம், குசல் பெரேரா
  • பேட்ஸ்மேன்கள் - தமீம் இக்பால், மஹ்மதுல்லா, பதும் நிசங்கா, தனஞ்சய டி சில்வா
  • ஆல்ரவுண்டர்கள் - ஷாகிப் அல் ஹசன், வாணிந்து ஹசரங்கா
  • பந்து வீச்சாளர்கள் - மெஹிடி ஹசன் மிராஸ், முஸ்தாபிசுர் ரஹ்மான், துஷ்மந்தா சமீர்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை