வங்கதேச டி20 தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
இந்திய மகளிர் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டி20 தொடரானது வரும் ஏப்ரல் 28ஆம் தேதி தொடங்கி மே 09ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சமீபத்தில் தான் மகளீர் பிரீமியர் லீக் தொடர் முடிவடைந்துள்ளதால், இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டிள்ளது. வழக்கம் போல் இத்தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுரும், துணைக்கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும் செயல்படவுள்ளனர். மேலும் நட்சத்திர வீராங்கனைகள் ஷஃபாலி வர்மா, ரிச்சா கோஷ், தீப்தி சர்மா போன்ற வீராங்கனைகளும் இத்தொடரில் இடம்பிடித்துள்ளது.
மேலும் நடப்பு மகளிர் பிரீமியர் லீக் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக வீராங்கனை தயாளன் ஹெமலாதா, மற்றும் ஸ்ரெயங்கா பாட்டில் ஆகியோரும் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளனர். அதேபோல் டபிள்யூபிஎல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஷா சோபனா, சாஜனா சஜீவன் போன்ற அறிமுக வீராங்கனைகளுக்கும் இந்த இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.
இந்திய மகளிர் டி20 அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கே), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, தயாளன் ஹேமலதா, சாஜனா சஜீவன், ரிச்சா கோஷ், யாஸ்திகா பாட்டியா, ராதா யாதவ், தீப்தி ஷர்மா, பூஜா வஸ்த்ரகர், அமன்ஜோத் கவுர், ஸ்ரேயங்கா பாட்டீல், சைகா இஷாக், ஆஷா சோபனா, ரேணுகா சிங் தாக்கூர், டைட்டாஸ் சாது.
இந்தியா - வங்கதேசம் தொடர் அட்டவணை
- முதல் டி20 போட்டி - ஏப்ரல் 28 - சில்ஹெட்
- இரண்டாவது டி20 போட்டி - ஏப்ரல் 30 - சில்ஹெட்
- மூன்றாவது டி20 போட்டி - மே 02 - சில்ஹெட்
- நான்காவது டி20 போட்டி - மே 06 - சில்ஹெட்
- ஐந்தாவது டி20 போட்டி - மே 09 - சில்ஹெட்