சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற குரூப் பி அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் பரோடா மற்றும் சிக்கிம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் டஸ் வென்ற பரோடா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய பரோடா அணிக்கு ஷஷ்வத் ராவத் - அபிமன்யூ சிங் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடிய அபிமன்யூ சிங் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்த நிலையில் அபிமன்யூ சிங் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஷஷ்வத் ராவத் 43 ரன்களில் விக்கெட்டை இழந்தர். பின்னர் இணைந்த பானு பணியா - ஷிவாலிக் சர்மா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

Advertisement

இதில் இருவரும் இணைந்து தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இதில் ஷிவாலிக் சர்மா 55 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்து வந்த விஷ்னு சோலங்கியும் அரைசதம் கடந்த கையோடு 50 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை அட்டமிழக்காமல் இருந்த பானு பணியா சதமடித்து அசத்தியதுடன், 5 பவுண்டரி, 15 சிக்ஸர்கள் என 134 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் பரோடா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்களைக் குவித்தது.

இதனையடுத்து 350 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய சிக்கிம் அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் பிரனெஷ் சேத்ரி, நிலேஷ் லமிச்சானே, ஆஷிஷ் தபா உள்ளிட்டோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதுதவிர அந்த அணியில் அதிகபட்சமாகவே ராபின் லிம்போ 20 ரன்களையும், அன்குர் மாலிக் 18 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்க்ளுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். 

இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்களை மட்டுமே எடுத்தது. பரோடா அணி தரப்பில் அஷ்வின் குமார், மஹீஷ் பிதியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் பரோடா அணி 263 ரன்கள் வித்தியாசத்தில் சிக்கிம் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேற்கொண்டு இப்போட்டியில் பரோடா அணி 349 ரன்களை குவித்ததன் மூலம், டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ரன்களைக் குவித்த அணி எனும் சாதனையையும் படைத்து அசத்தியது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News