16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் 43ஆவது லீக் போட்டியானது நேற்று லக்னோ மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. அதன்படி நேற்றைய போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து வெறும் 126 ரன்களை மட்டுமே குவித்தது. பெங்களூரு அணி சார்பாக விராட் கோலி 31 ரன்களும், டூ பிளெசிஸ் 44 ரன்களும் குவித்தனர். பின்னர் 127 ரன்கள் அடித்தால் வெற்றி என்று எளிய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியானது தொடக்கத்திலிருந்து  அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இறுதிவரை போராடியும் கடைசியில் 19.5 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் அற்புதமான வெற்றியை பெற்றது.

Advertisement

இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றிபெற்றது குறித்து பேசிய ஆர்சிபி அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ், “சின்னசாமி மைதானமும் லக்னோ மைதானமும் முற்றிலும் வெவ்வேறாக இருக்கிறது. முதல் ஆறு ஓவர்கள் நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடியதாக நினைக்கிறேன். அதே போன்று விளையாடி இருந்தால் நிச்சயம் எங்களது ரன் குவிப்பு அதிகமாக இருந்திருக்கும்.

முதல் விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்தது மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் என்று தான் நினைக்கிறேன். அதே போன்று இந்த போட்டியில் மழைக்குப் பிறகு நானும் தினேஷ் கார்த்திக் உள்ளே செல்கையில் 135 ரன்கள் வரை அடித்தால் நல்ல ஸ்கோராக இருக்கும் என்று நினைத்தோம். ஆனாலும் எங்களால் 126 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

அதன் பின்னர் பவுலிங் செய்ய வருவதற்கு முன் பவர்பிளே ஓவர்களில் இரண்டு, மூன்று விக்கெட்டுகளை எடுத்து விட்டால் நிச்சயம் நம்மால் வெற்றி பெற முடியும் என்று கூறினேன். அதிலும் குறிப்பாக ராகுல் இல்லாத நேரத்தில் இந்த இலக்கு அவர்களுக்கு சவாலாக இருக்கும் என்று எங்கள் வீரர்களிடம் கூறினேன். அதன்படி சிறப்பாக செயல்பட்ட எங்களது பந்துவீச்சாளர்கள் அற்புதமான வெற்றியை பெற்றுத் தந்துள்ளனர்” என தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News