பிபிஎல் 2021: மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தியது ஹரிகேன்ஸ்!

Updated: Fri, Dec 24 2021 16:30 IST
BBL 11: Hobert Hurricans defeat Melbourne Stars by 23 runs (Image Source: Google)

பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹாபர்ட் ஹரிக்கென்ஸ் அணி பென் மெக்டர்மோட்டின் அதிரடியான அரைசதத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களைக் குவித்தது. 

இதில் அதிகபட்சமாக பென் மெக்டர்மோட் 67 ரன்களைச் சேர்த்தார். மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி தரப்பில் ஆண்ட்ரே ரஸ்ஸல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து இலக்கை துரத்திய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் மார்க்ஸ் ஸ்டோய்னிஸ் 18, மேக்ஸ்வெல் 12, ஜோ பர்ன்ஸ் 22, ஆண்ட்ரே ரஸ்ஸல் 12 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த ஜோ கிளர்க் 52 ரன்களுடன் வெளியேறினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 

ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி தரப்பில் ரிலே மெரிடித், தாமஸ் ரோஜர்ஸ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை