பிபிஎல் 2022: ஜெய் ரிச்சர்ட்சன் அபாரம்; மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி பெர்த் ஸ்காச்சர்ஸ் அபார வெற்றி!

Updated: Thu, Dec 29 2022 22:13 IST
Image Source: Google

பிக் பேஷ் லீக் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 20ஆவது லீக் ஆட்டத்தை மெல்போர்ன் ஸ்டார்ஸ் - பெர்த் ஸ்காச்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு ஜோ கிளார்க் - தாமஸ் ரோஜர்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். பின் கிளார் 33 ரன்களிலும், தாமஸ் ரோஜர்ஸ் 20 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் களமிறங்கிய வெப்ஸ்டர், நிக் லார்கின், மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோரும் சொற்ப ரன்களோடு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

பின்னர் கார்ட்ரைட் - டிரெண்ட் போல்ட் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இறுதியில் கார்ட்ரைட் 36 ரன்காளில் அட்டமிழக்க, டிரெண்ட் போல்ட் 23 ரன்களோடு இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இருப்பினும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்களை மட்டுமே எடுத்தது. பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி தரப்பில் ஜெய் ரிச்சர்ட்சன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து இலக்கை துரத்திய பெர்த் ஸ்காச்சர்ஸ் அணியில் ஃபாஃப் டூ பிளெசிஸ் 3 ரன்களிலும், ஆரோன் ஹார்டி 19 ரன்களிலும் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ஆடம் லித் 35 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். 

பின்னர் ஜோடி சேர்ந்த ஜோஷ் இங்லிஸ் - ஆஷ்டன் டர்னர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஷ்டன் டர்னர் அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 53 ரன்களில் ஆஷ்டன் டர்னரும் விக்கெட்டை இழந்தார்.

இருப்பினும் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 17.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை