பிபிஎல் 2021: பில்லிங்ஸ், மஹ்மூத் அபாரம்; சிட்னி தண்டர் வெற்றி!

Updated: Sun, Dec 19 2021 18:23 IST
Image Source: Google

பிக் பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 14ஆவது போட்டியில் சிட்னி தண்டர் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய சிட்னி அணியில் மேத்யூ கிக்ஸ் - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் கிக்ஸ் 28 ரன்னிலும், ஹேல்ஸ் 35 ரன்னிலும், ஜேசன் சங்கா 39 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

அடுத்து களமிறங்கிய சாம் பில்லிங்ஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சிட்னி தண்டர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சாம் பில்லிங்ஸ் 64 ரன்களைச் சேர்த்தார். 

இதையடுத்து கடின இலக்கை துரத்திய பிரிஸ்பேன் ஹீட் அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் அந்த அணி 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ரன்களை மட்டுமே எடுத்தது. 

சிட்னி தண்டர் அணி தரப்பில் சாகிப் மஹ்மூத் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் சிட்னி தண்டர் அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணியை வீழ்த்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை