பிபிஎல் 2022: ஹென்றி தோர்ன்டன் பந்துவீச்சில் வீழ்ந்தது ஸ்டார்ஸ்!
பிக் பேஷ் லீக் தொடரில் கரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையேயான 39ஆவது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்துவீசியது. அதன்படி களமிறங்கிய அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி ஜோனதன் வெல்ஸின் அதிரடியான அரைசதத்தின் மூலம் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக ஜோனதன் வெல்ஸ் 73 ரன்களைச் சேர்த்தார். ஸ்டார்ஸ் அணி தரப்பில் ரெயின்பேர்ட், ஹிஞ்ச்லிஃப் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை துரத்திய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் கேப்டன் மேக்ஸ்வெல், ஜோ கிளார், வெப்ஸ்டர், மார்காஸ் ஸ்டோய்னிஸ் என நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர்.
அடுத்து களமிறங்கிய கேட்ரைட் அதிரடியாக விளையாடி 49 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இதன்மூலம் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தி மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.