பிபிஎல் 2022: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சிட்னி சிக்சர்ஸ்!

Updated: Wed, Jan 26 2022 17:57 IST
BBL 2022: Kerr has taken the Sixers into the final! (Image Source: Google)

பிக் பேஷ் லீக் தொடரின் நடப்பாண்டு சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஏற்கெனவே பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில் அடுத்ததாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் அணி எது என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது.

இந்நிலையில் சேலஞ்சர் சுற்று ஆட்டத்தில் இன்று சிட்னி சிக்சர்ஸ் - அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய ஸ்டிரைக்கர்ஸ் அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ், ஷார்ட் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த இயன் காக்பின் - ஜானதன் வெல்ஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஜானதன் வெல்ஸ் 62 ரன்களைச் சேர்த்தார். சிக்சர்ஸ் அணி தரப்பில் சீன் அபேட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து இலக்கை துரத்திய சிட்னி அணிக்கு ஹெய்டன் கீர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் கீர் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றியை உறுதிசெய்தார். 

இதனால் 20 ஓவர்களில் முடிவில் சிட்னி சிக்சர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களைச் சேர்த்து கடைசி பந்தில் த்ரில் வெற்றிபெற்றது. 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹெய்டன் கீர் 98 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன் மூலம் சிட்னி சிக்சர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி பிபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

இதையடுத்து நாளை மறுநாள் நடைபெறும் இறுதிப்போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணி, பெர்த் ஸ்காச்சர்ஸ் அணியை இறுதிப்போட்டியில் சந்திக்கிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை