பிபிஎல் 2022: சிக்சர்ஸை வீழ்த்தி ஸ்காச்சர்ஸ் அபார வெற்றி!

Updated: Sun, Jan 09 2022 20:11 IST
Image Source: Google

பிக் பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 42ஆவது லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் - பெர்த் ஸ்காச்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பெட்டிங் தேர்வு செய்த சிட்னி அணியில் ஜோஷ் பிலிப்பே, டேனியல் கிறிஸ்டியன் ஆகியோரைத் தவிற மற்ற வீரர்கள் சரிவர சோபிக்கவில்லை.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் சிட்னி சிக்சர்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கிறிஸ்டியன் 35 ரன்களையும், ஜோஷ் பிலிப்பே 32 ரன்களையும் சேர்த்தனர். 

இதையடுத்து இலக்கைத் துரத்திய ஸ்காச்சர்ஸ் அணியில் பேட்டர்சன், பான்கிராஃப்ட், எவன்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 

இதையடுத்து களமிறங்கிய ஆஷ்டன் டர்னர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்ததுடன், அணியை வெற்றியை நோக்கியும் அழைத்துச் சென்றார்.

இதன்மூலம் 19 ஓவர்கள் முடிவில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை